எல்லைக் கட்டுப்பாட்டு அனுமதி (Inner Line Permit - ILP)
எல்லைக் கட்டுப்பாட்டு அனுமதி (Inner Line Permit - ILP) ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய/செல்ல, ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி சீட்டு ஆகும். இந்தச் சீட்டு வெறும் நுழைவு/பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. சாதாரணமாக, 15 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். இதைத் தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது; கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு. இதன் மூலம் மண்ணின் நிலம், வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். வேறு மாநிலத்தவர்கள் நிரந்தரமாக தங்க முடியாது. எனவே மண்ணின் மக்கள் கையிலே கல்வி, வணிகம், தொழில் இருக்கும். Inner Line Permit கொண்டு வந்தால், (Citizenship Amendment Bill - CAB) குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் CABயிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்த உட்கோட்டு நுழைவு அனுமதி முறையில் மணிப்பூரின் சேர்க்கையும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியன்று அறிவிக்கப் பட்டது. இந...