தமிழை Tamil என்றே எழுதுவோம்

தமிழ் தெரியாதவர்களுக்கு தான் ஆங்கிலத்தில் Tamil என்று எழுதுகிறோம், தமிழ் தெரியாதவர்கள் #Tamizh என்பதை தமிஜ் என்றுதான் படிப்பார்கள். தமிழ்நாடு கூட Tamilnadu என்றுதான் இருக்கிறது, நாம் தமிழர் என்ற கட்சியின் பெயர் கூட Tamilar என்றுதான் இருக்கிறது, தமிழர்களை உலகெங்கும் Tamils என்றுதான் அழைக்கிறார்கள், உண்மையில் தமிழை ஆங்கிலத்தில் Tamil என்று எழுதாமல், இப்படி Tamizh என்று எழுதுவது, தமிழை தமிழ் அறியாதவர்கள் படிக்க முடியாமல் செய்யும் சதி என்று தோன்றுகிறது. இது எனது நிலைப்பாடு. தமிழை Tamil என்றே எழுதுவோம்..
எழுத்து என்பது ஒரு குறியீடு.. தமிழில் மாத்திரை அளவு உண்டு.. அதனை ஆங்கிலத்தில் நம்மால் இணைக்க முடியாது.. தமிழ் அல்லாத பிற மொழி எழுத்துக்கள் ஒரு குறியீடு மட்டுமே.. அதனை வைத்து கிட்டத்தட்ட புரிந்துகொள்ளும்படி இருத்தல் வேண்டும்.. தமிழ் எழுத்து மொழி அல்ல ஓசை மொழி.. உலகில் அனைத்தும் முடியும் அப்படி தான்.. பிறப்பால் அமெரிக்கராக இருக்கும் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கிறது... அவர்களுக்கு வகுப்பெடுக்கும் காணொளிகளை பார்த்தால்.. அவர்கள் எழுத முயலும் ஸ்பெல்லிங் மிக வித்தியாசமாக இருக்கும்.. பல நேரங்களில் அவை தான் சரி என்று தோன்றும்.. குழந்தைகள் எழுத்துப் பிழையாக எழுதும் பல சொற்கள் கிட்டத்தட்ட உண்மையில் அது சரி போலவே தோன்றும்.. பிற மொழியினர் தமிழ் மொழி அறியாதவர்கள் குழந்தைகள் போன்ற தான் நாம் கருத்தில் கொண்டு எழுத்தை அமைக்க வேண்டும். தமிழ் எழுத்துக்கள் 247 .. இவை அனைத்திற்கும் ஆங்கிலத்தில் எழுத்துக்களை கோர்த்து தமிழ் ஓசையே உருவாக்க முடியுமா.. ஏன் ழ வில் மட்டும் இத்தனை குழப்பம் எல்லோரும் உருவாக்குகிறார்கள்..
குறிப்பு பிரிட்டிஷ் ஆவணங்களிலும் பிரஞ்ச் ஆவணங்களிலும்.. பல தொல்லியல் ஆவணங்களிலும் Tamil #Tamul Thamil என்றுதான் இருக்கிறது.
Comments
Post a Comment