பழந்தமிழர் பாதங்களின் தூரங்கள்
பழந்தமிழர் பாதங்களின் தூரங்கள்

நான் சிறுவயதில் இருக்கும் பொழுது எனது பாட்டி ஊரிலிருந்து சிலர் எங்கள் வீட்டிற்கு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் நடந்து வருவார்கள். அவர்களுக்கு அந்த நடை பெரும் தூரமாக தெரிவதில்லை.
அதனை வைத்து பழந்தமிழர்களின் பயணங்களை சற்று நோக்கும்போது. இதுவரை எனக்குள் இருந்த பிம்பம் உடைந்தது. அதாவது கீழடியில் இருந்து மொகஞ்சதாரோ சிந்து நாகரிக இடத்திற்கு நடந்து செல்வதற்கு வெறும் 500 மணி நேரம் தான் ஆகும். அதாவது 20 வெறும் நாட்கள்.
20 நாட்கள் யாராலும் தொடர்ந்து நடக்க முடியாது, அவர்கள் சற்று ஓய்வு எடுத்து ஓய்வெடுத்துக் தான் நடந்து சென்று இருப்பார்கள். அதனடிப்படையில் ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சராசரியாக எத்தனை கிலோமீட்டர் நடக்கிறான் என்ற கணக்கை பார்க்கும் பொழுது.
ஒரு நாளில் பண்டைய மனிதர்கள் பொதுவாக 50 கிலோ மீட்டர் நடந்து இருக்கிறார்கள் என்று இன்றைய நவீன அறிவியல் கூறுகிறது. இதனை இன்று நம்மால் கூட அது செயல்படுத்த முடியும் என்கிறது. அதன் அடிப்படையில் நாம் பார்த்தோமென்றால் கீழடியிலிருந்து ஹரப்பா செல்வதற்கு வெறும் 50 நாட்கள் போதுமானது.
80வயது வரை வாழும் ஒரு மனிதன். சராசரியாக 1,77,000 கிலோமீட்டர் நடக்கிறான் என்று இன்றைய நவீன அறிவியல் கூறுகிறது. இந்த தூரமானது பூமியின் சுற்றளவு, பூமத்திய ரேகையின் பூமத்திய ரேகையில் 24,901 மைல்கள் தூரத்தை ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஐந்து முறை கடக்கிறான் என்று பொருள். இவைகள் சராசரி மனிதனின் நடை வேகத்தை வைத்து கணக்கிடப்பட்டது. வேகமாக நடப்பார்கள். ஏழு முறை உலகை சுற்றுவார்கள் என்று கூறுகிறது அறிவியல்
பண்டைய தமிழர் களைப் பார்க்கும்போது, ஆசீவகர்கள் சித்தர்கள் போன்றவர்கள் நடப்பவையே பெறும் வழக்கமாக வைத்திருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. திருச்சியிலிருந்து மற்கலி கோசலர் உத்திரபிரதேசம் சென்றதும் அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்ததும். அந்தக் காலகட்டங்களில் மிக சாதாரணமாக நடந்திருக்க கூடும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இது வெறும் நடைப்பயணத்தை மட்டுமே கூறுகிறோம். மாட்டுவண்டி போன்ற வண்டிகளில் சென்றிருந்தார்கள் என்றால், இந்த தூரங்கள் எல்லாம் வெறும் சொற்ப தூரங்களே.
தெற்கில் இருந்து வடக்கிற்கும் வணிகம் செய்தார்கள். வடக்கிலிருந்து தென்னகத்துக்கு வணிகம் செய்தார்கள். போன்ற வரலாறுகள் 2000 வருடத்திற்கு முன்பே இங்கு கிடைக்கிறது.
அதனைப் பார்க்கும் போது. தெற்கிலிருந்து மொழி நாகரிகம் போன்றவை வடக்கிற்கு அந்தக் காலங்களில் சென்றிருப்பது மிக மிக சாதாரணமான விடயம். தமிழன் நிலம் வழியாகவும் உலகை அளந்து இருப்பான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஜெயின பௌத்த மத குறிப்புகளில் ஆசீவக மெய்யியலை வணிகர்களும் போர் வீரர்களும் பின்பற்றி வந்தார்கள் என்ற குறிப்புகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் ஆசீவகர்களுக்கு தூரம் தனது தத்துவப் பரப்புரைகளுக்கு தடையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது..
பழம் தமிழ் விடயங்களை ஆராயும்போது நமது நடைமுறை சிந்தனையில் இருந்து விடைபெற்று அந்தக் காலத்திற்கு சென்று யோசிக்கும்போது பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது. தமிழர்கள் சிந்தையால் மட்டுமல்ல பாதத்தாலும் உலகத்தை அளந்து இருக்கிறார்கள் என்பதனை விரைவில் உலகம் அறியும்.
தோழமையுடன்
தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே
#ஆசீவகம் (#Ājīvika)
Comments
Post a Comment