நார்வே நாளிதழில் மகள் ஈவா

ஈவாவை பற்றி இதுவரை மூன்று முறை நாளிதழில் செய்தி வந்திருக்கிறது அவை அனைத்தும் அவள் வாங்கிய பரிசை பற்றிய இருவரி செய்திகள், ஆனால் இந்த முறை அவளின் படைப்பை மட்டும் பேசாமல் அவளை பற்றியும் ஒரு பத்திரிக்கையாளர் அவளிடம் பேட்டி கண்டு கட்டுரையாக எழுதியுள்ளார். பெற்றோர்களாக எங்களுக்கு இதில் பெரும் மகிழ்ச்சி குழந்தையிலிருந்து அவள் படங்களை இந்த முகப்புத்தகத்தில் உங்களோடு பகிர்ந்து வருகிறேன் நீங்களும் இந்த செய்தியை மகிழ்வோடு அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.
''கிளாரா டூரிட் ஃபிட்ஜே'' பத்திரிக்கையாளரின் நார்வேஜியன் கட்டுரை, வெளியிடப்பட்டது: 20.12.2019. என்னால் இயன்ற தமிழாக்கத்தில் இதோ
-----------------------------------------------
''திறமையின் குரல் திறந்துவைத்தது திருவிழாத்தெருவை''
வெள்ளை மழை பொழியாத கிறிஸ்துமஸ் மாதமா வானமே நீ வெள்ளை மழை பொழி வெள்ளை மழை பொழி வெள்ளை மழை பொழி என்று தேவதை ஒருத்தி மேடையில் தனியாக நின்று பாடுகிறார், அவளின் அந்த சக்தி வாய்ந்த குரல் விழா தெருவின் வாசலை திறந்து வைத்தது. நகரும் கால்களை நிற்க வைத்தது "லெட் இட் ஸ்னோ"என்று பாடத் தொடங்கி அதனை அடுத்து என்ற "வின்டர் வொண்டர்லேண்ட்" பாடலையும் பாடி முடிக்கிறார்.
கலாச்சாரப் பள்ளியைச் சேர்ந்த ஈவா இங்கர்சால் (11) சிறு வயதிலிருந்தே தான் பாடிக்கொண்டிருப்பதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக வென்னெஸ்லா கலாச்சார பள்ளியில் மாணவராக இருந்து வருவதாகவும் இவா கூறுகிறார். பாடுவதைத் தவிர, அவர் பியானோ மற்றும் கிட்டார் இரண்டையும் வாசிக்கிறார்.
திறமையும் தன்னார்வம் உள்ள குழந்தைகளுக்கு மட்டும்தான் இங்கு இடம் கொடுக்கப்படுகிறது, 3 வகுப்பு மாணவியாக ஈவா இருக்க காரணமும் அதுவே, எல்லோருக்கும் இந்த வாய்ப்பு நாங்கள் கொடுப்பதில்லை, இது மட்டுமல்லாமல் அவர் இந்திய இசையும் பகிர்கிறார் படிக்கிறாள், மிகவும் திறமையான பெண், அவளின் திறமை இன்னும் வெளியுலகுக்கு காட்டப்படாமல் மறைந்து தான் இருக்கிறது என்கிறாள் ஈவாவின் இசை ஆசிரியை ''அன்னே ரிஸ்னஸ் டோர்விக்'' .
உன் வாழ்வில் இசையும் கனவும் எப்படி பயணிக்கிறது என்று கேட்டதற்கு ஈவா கூறுகிறாள்
எல்லோரும் உணர்வுக்கு ஏற்ப இசையை கேட்பார்கள் நான் என் உணர்வுக்கு ஏற்ப இசையை உருவாக்குவேன், இசை எனது அனைத்து உணர்வின் வடிகாலாக இருக்கிறது நான் ஒவ்வொரு முறையும் மிகுந்த மன அமைதி அடைகிறேன் இசையால்.
நான் விண்வெளியில் மிகவும் ஆர்வமாக உள்ளேன் எனக்கு லட்சிய கனவு என்பது நாசாவில் பணியாற்ற வேண்டும் என்பது,
இசையோடு என்றும் வாழ வேண்டும். இசை எப்போதுமே தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது என்கிறாள் ஈவா.
நாளை இலண்டன் புறப்படுகிறாள் விடுமுறைக்கு அங்கு தான் இருக்கப் போகிறார் என்பதை மிகவும் ஆர்வமாக கூறி புத்திசாலித்தனமான புன்னகையை எங்களுக்கு பரிசளித்து விடைபெறுகிறார்.
-----------------------------------------------
ஒன்றாம் வகுப்பு முதல் எல்லா கிறிஸ்துமஸ் மாதங்களிலும் மேடையில் பாடுவது, முதியோர் இல்லம் சென்று அவர்களுக்கென்று பாடுவது என்று, தான் வாழும் சமுதாயத்தில் பிறரை இசையால் மகிழ்வித்து வருகிறார்.. ஒவ்வொருமுறையும் முதியோர் இல்லத்தில் பாடி விட்டு வீடு திரும்பும் போது, அவளால் அதனை எளிதாக தாங்கிக்கொள்ள இயலாது, அவள் பாடுவதைக் கேட்டு அங்கு இருக்கும் முதியவர்கள் அழுவதை வீட்டில் வந்து கூறி தானும் அழுவாள், அப்பா அம்மா உங்களுக்கும் வயசாகி விடுமா என்று அஞ்சுவார், இருந்தபோதும் உன்னால் அங்கு பல பாட்டி தாத்தாக்கள் மகிழ்வோடு இன்று இருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொள் என சமாதானப் படுத்துவேன், நான் கிறிஸ்தவன் அல்ல எம்மதம் தமிழம் என்று தொடர்ச்சியாக சொல்லும்போது நட்பில் உள்ள சில கிறிஸ்தவ உறவுகள் நெருடலாக அதனை அணுகலாம் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..
அனைத்து கிறிஸ்தவ உறவுகளுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Comments
Post a Comment