தமிழே மந்திரம்
தமிழில் மந்திரம் பாட வேண்டும் என்று போராடும் இந்த வேளையில் தமிழே மந்திரம் என்பதை நினைவில் கொள்வோம்
#ஓம் - மூலமந்திரம் [அ + உ – ஓ + ம் - ஒம்.]
ஓமெனு மோரெழுத்து - கம்பராமாயணம்
ஓம் என்பது தமிழ் எழுத்து என்பதற்கு இலக்கிய சான்றுகள் கம்பராமாயணம் முதல் பல இருக்கிறது. சிந்து நாகரீக ஓமெனும் முத்திரையும் தமிழி எழுத்தில் ஓ என்ற சொல்லுக்கு உள்ள வடிவமும் ஒற்றுமையாக இருக்கிறது.. ஓ - 𑀑 ॐ
சிந்து எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் என்ற பலரும் கூறி வரும் இந்த வேளையில் ஓம் ஸ்வஸ்திக் அடையாளம் ஆகிய அனைத்தும் தமிழர்களின் அடையாளங்களே
உயிர் எழுத்தின் தன்மை பன்மை யீறு என்ற தமிழ் இலக்கணத்தில் அம் ஆம் இம் ஈம் உம் ஊம் முதல் ஓம்வரை அனைத்தும் தமிழில் இருக்கிறது..
மங்கல அடையாளமாகக் கருதப்படும் ஓம் இலச்சினை (Swa- stika); உலகமுழுவதும் பரவியுள்ளது. சிந்துவெளி முத்திரைக ளில் பெருகக் காணப்படுகிறது. இது அந்தக் காலத்திய எழுத்துகளில் ஒன்றாக இருக்கலாம் என்னும் கருத்தினை திரு. கிருட்டிணா வேணுகோபால் என்பவர் (Mirror-Apr.1985); வெளியிட்டிருந்தார். இதனை உணராத பலர் மந்திரம், தாயத்து. தகட்டு ஏவலெழுத்து என்றெல்லாம் விரித்துரைக்க லாயினர்.
நான்கு கால் இலச்சினையென்று இங்கிலாந்திலும், தோர் கடவுளின் கையிலுள்ள படைக்கலம் என்று காண்டிநேவி யாவிலும், உயிரளிக்கும் நீர் வடிவம் என்று சப்பானிலும், பெருங்கடலையும் தொடக்கமும் முடிவுமில்லாத பெருக்கத்தை யும் குறித்தது என்று சீனத்திலும் மக்கள் நம்பினர்.
எல்லா நாடுகளிலும் இது நன்மையின் அடையாளமாகவே கருதப்பட் டது. எல்லாச் சமயங்களிலும் இது மங்கலச் சின்னமாகிவிட் டது. செருமானிய நாட்டில் இட்டலரும் இதனைப் பொறிக்கச் சொன்னதாகவும் இலச்சினை செய்தவர்கள் தவறுதலாக வல நோக்காமல் இடப்பக்கம் நோக்கிய சுழற்சியில் அமைத்துக்கெ பத்திகா வடிவமாக்கி விட்டதாகவும். இது தீமையின் அடையாளம் என்று பிறகு தெரிந்ததாகவும் கூறுவர்.
கவசதிகாவின் உண்மையான ஒலிப்பு 'ஓம்' என்னும் தமிழ்ச் சொல்லே என்பது கண்டறியப்பட்டுள்ளது. 'ஓம்' என்னும் தமிழ்ச்சொல் (ஒம்பு); காப்பாற்று என்று பொருள்படுகிறது.
சிந்துவெளியெழுத்தமைப்பின்படி 'ஓ' என்னும் நெடில் உயிரெ ழுத்தை ஒஒ என இரண்டு குறில் எழுத்துகளால் குறிப்பர்.
சிந்துவெளியெழுத்திலும் தமிழ் பிராமி எழுத்திலும் {ஓ} என்பதே ஒகரக்குறிலைக் குறிக்கும் எழுத்தாக இருந்தது. ஓகார நெடிலுக்கு இரண்டு ஒகரங்கள் அடுத்தடுத்து எழுதப்படும், கூட்டல் குறி + மகரத்தின் அடையாளம். ஆதலின் நடுவில் மகரமும் ஒகரம் ஒன்றையொன்று வெட்டுமாறு ஓம் என்னும் சொல் சிந்துவெளி மொழியில் எழுதப்பட்டுள் ளது.
இதனைப் பானைத் தொழிலாளர் அணிகலத் தொழிலாளர். ஏனங்கள் செய்வோர் கலைப்பணியாளர்கள் ஆகிய அனைத் துப் பிரிவினரும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஓம் என்று இதனைப் படித்தது முற்றிலும் சரி என்பதற்குச் சான்றாக மொகஞ்சதாரோவில் கிடைத்த (M.482);
மற்றொரு முத்திரையும் சான்றாகிறது. இதில் 'ஓமன்' என்பவனின் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. 'ஓம்' என்பதற்குரிய கவகதிகா இலச்சினையே அதிலும் சொல்லின் முதலசையாகவும். 'அன்' ஈற்றசையாகவும் காணப்படுகிறது.
பிருகு முனிவரின் ஓம் பாடல் :
பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
பகடில்லை ஆகாரம் பின்னே நாட்டே
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே
செயமான ஈகாரம் உகாரம் கேளு
பாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே
ஓம் ஓம் ஓம்
இவன்
தமிழறிவன்.திரு.ஐங்கர்சால்
Comments
Post a Comment