#ஈழநில_நடுகல்
#ஈழநில_நடுகல் முன்னோர் வழிபாடு தமிழர்களின் மரபு. அதுவும் ஒரு இனத்தை குழுவை காக்க போராடி இறப்பு வரை கடவுளாகவே போற்றி வருவது வழக்கம். நமது சம காலத்தில் நம் கண் முன்னே இனத்தை காக்க லட்சக்கணக்கான பேர் இறந்தும். அவர்களுக்கான நினைவுகூறல் முழு சுதந்திரத்துடன் எங்குமே நடத்தப்படுவதில்லை. ஈழ நிலத்தில் பெரும் தடைகளைத் தாண்டியே நடத்தி வருகிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்காங்கே சில அரங்குகளில் நடத்துகிறார்கள். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் தான் பெரும் கூட்டங்கள் கூடி வருகிறது. அதுவும் ஒரு சில அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும் தலைவர்களும் பெரும் இயக்கங்களும் நடத்துவதும் அதற்குப் பின் சென்று தான் நாம் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் தேங்கி நிற்பதும் நம் வீரர்கள் செய்த தியாகத்தின் முன் அர்த்தமற்றது. நமக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூற யாரையும் நம்பி யாருக்காகவும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் அனைவரும் நமக்கு தெரிந்த நமக்கு பிடித்த ஏதோ ஒரு வகையில் நன்றி அஞ்சலியை செலுத்துவோம். எந்த ஒருவனும் அடுத்தவர்...