Posts

Showing posts from June, 2019

சித்தி

Image
எனது அம்மா, எங்கம்மாவின் தங்கை #மம்மி , எங்க சித்தா அம்மாவின் தங்கையை நான் சிறுவயதிலிருந்து மம்மி என்றே அழைப்பேன் காரணம் சித்தியின் மகன் அப்படி கூப்பிடுவதால், இந்த சித்தியும் சித்தப்பாவும் தான் எனது வாழ்வில் சொந்தங்களாக நான் தனித்து வளரும் வரை இருந்திருக்கிறார்கள். மற்ற அனைவரும் பேருக்கு உறவாக இருந்தாலும் அதற்குமேல் எனக்கு அவர்கள் எதுவும் செய்ததில்லை. (எனது தாய் மாமாவை தவிர. அவரைப் பற்றி என்றாவது ஒரு பெரிய கட்டுரை கண்டிப்பாக எழுதுவேன்). எனது சித்திக்கு ஒரே மகன் அவன் நான் பிறந்த நாளிலே பிறந்தான். சிறுவயதில் இருந்து நாங்கள் இருவரும் ஒரே உடைதான் அணிவோம். ஒரே பள்ளியில் படித்தோம். இவை எல்லாம் பெரிய ஆச்சரியமில்லை ஆனால் இன்றளவும் என்னால் மற்றொரு நபரை பார்க்க முடியாது என்றால் அது என் சித்தி தான். அவர்கள் கண்ணில் கூட எனக்கும் அவரது மகனுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் பார்த்ததில்லை இது ஒரு நாள் இரு நாள் அல்ல என் வாழ்நாள் முழுவதிலும் அதை நான் பார்த்ததே இல்லை. எனது அன்னை கூட எனது தம்பியிடம் சித்தியை விட சற்று அன்பை அதிகமாக காட்டுவார்கள் ஆனால் எனது சித்தியோ எந்த ஒருவித்தியா...