நூறாவது குரங்கு
நான் நூறாவது குரங்காக கூட இருக்கலாம்!
அது என்னநூறாவது குரங்கு?
ஜப்பானில் ஒருதீவில் குரங்குகளுக்கு அவை உண்ணும் பழங்களை கடல் நீரில் கழுவி உண்ண கற்றுக்கொடுக்கப்பட்டது. சில காலம் கழித்து பார்த்தால் கற்றுக்கொடுக்கப்பட்டகுரங்குகளிடமிருந்து அந்த தீவிலுள்ள மற்ற குரங்குகளும் கற்று கொண்டுவிட்டன. அதுமட்டுமில்லாமல் இதே பழக்கம் ஒன்றுகொன்று தொடர்பில்லாத பக்கத்து தீவிலும் பரவிவிட்டது. இதுவே ‘நூறாவது குரங்கு விளைவு‘ எனப்படும்.
அதாவது எதாவதுஒரு பழக்க வழக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவில் சமூகத்தில் புதிதாக உருவானால் அதுகற்றுக்கொடுக்கப்படாமலே மற்ற சமூகங்களிடமும் பரவிவிடுகிறது. இங்கே நூறு என்பது ஒருகுத்து மதிப்பான அளவுதான். ஒரு வழக்கம் இந்த அளவுக்கு மேலதிகமானவர்களால்கடைபிடிக்கப்படுமானால் அது தானாகவே இதர மக்களிடமும் பரவக்கூடும்.
இதன் மூலம்நமக்கு புரியும் கருத்து என்பது, நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள்செய்யும் போது, அதில் உள்ள குறை நிறைகளை பற்றி கவலைபடாமல் தொடந்து செய்வதன் மூலம் அது நீண்ட தூரம் பயணம் செய்து பலரை நல்வழிபடுத்தும் என்பதுதான்.
நண்பர்களே,நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், என்பதை விட, நல்ல விசையங்களை பற்றி சிந்திக்க செய்தாலே போதும். அது தானாகவேகாற்றில் கலந்து மற்ற அனைத்து மக்களையும் சென்று சேர்ந்து விடும்.
இந்த மாதிரி ஒருவாழ்கை முறையில் நான் ஒரு நூறாவது குரங்காக இருப்பதில் எனக்கொன்றும்வருத்தமில்லை...
விரிவான விளக்கம்:-
1952, ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக்குரங்கினத்தின் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் குரங்குகளுக்குஉணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து வந்தார்கள். அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கைவெட்ட வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு வந்தன. பெரும்பாலும் ஈரசகதியில் விழுந்திருந்த கிழங்கை எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின்சுவையும் கிழங்கோடு சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன. அதில்பதினெட்டு மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை பக்கத்தில் இருந்தஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது. அது சுவை குறையாததாக இருக்கவே அப்படிக்கழுவி சாப்பிடும் வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது. அதைப் பார்த்த மற்ற சிலகுரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. ஆனால் வயதானகுரங்குகள் மட்டும் பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன என்றாலும்இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும் வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.
கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக்கிழங்கைக் கழுவி சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும் குரங்கேஇல்லை என்கிற நிலை வந்தது. அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அந்தத் தீவில்மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப்புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.
அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதியபழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒருகணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதியபழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர்.அந்தக் கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச் சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு"நூறு" என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.
இந்த தத்துவத்தை "நூறாவதுகுரங்கின் விளைவு" (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கினார். அவரும் அவருக்குப் பின் வந்தஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும் இதேதத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதினர். அந்த ஆரம்பக் கணிசமான தொகையைஎட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான தொகையை எட்டியபின் அந்தசிந்தனைகளும், செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில்உள்ள மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது.
இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide)என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (LyallWatson) என்ற எழுத்தாளரும் உதாரணங்களுடன் கூறுகிறார்.இப்போது இந்தக் கருத்து பரவலாகப் பலம் பெற்று வருகிறது.
எந்தப் புதிய நன்மையையும்சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும் ஆரம்பத்தில் கடினம்.அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை.மாறாக சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்கள். ஆனாலும்தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர்இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே எழுதப்படுகிறதுஎன்று கூட சொல்லலாம். அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்துசெயல்படும் போது பெரிய மாற்றங்கள் தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.
நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்றஆரம்பித்தவுடன் அதிசயம் நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறதுஎன்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ, எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு நபரின் உதவி அல்லதுபங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன் அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள் இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள் நிகழுமானால் அது மிகப்பெரியபாக்கியம் அல்லவா?
ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனைநடைமுறைப்படுத்தப் படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள்பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.ஏதாவது நல்ல மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள் மனதில் உருவாகுமானால்அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பியுங்கள். அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா, யாராவதுபரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம். அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப்போக சரி செய்து கொள்ளலாம். ஏனென்றால் இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவானவிதத்திலேயே இருப்பனவல்ல. காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை தான்.மேம்படுத்தப்பட்டவை தான்.
அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்லமாற்றங்களிலும் உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு வலுவூட்டுங்கள். முதல் நூறில்ஒருவராக இருந்து பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவாஅர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம் அனுபவிக்கும் எத்தனையோநன்மைகள் இது போன்ற ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம் பங்கிற்குநாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி விட்டுச் செல்வதல்லவா நியாயம்?
This phenomenon is considered to be due to critical mass.When a limited number of people know something in a new way, it remains theconscious property of only those people. The Hundredth Monkey Syndromehypothesises that there is a point at which if only one more person tunes in toa new awareness, a field of energy is strengthened so that new awareness ispicked up by almost everyone.
The Hundredth Monkey Effect was first introduced bybiologist Lyall Watson in his 1980 book, ‘Lifetide.’ He reported that Japaneseprimatologists, who were studying Macaques monkeys in the wild in the 1950s,had stumbled upon a surprising phenomenon. Some anthropologist were studyingthe habits of monkeys on some islands in the ocean off the shores of Japan.They found one particularly smart little fellow, and taught it to wash its foodbefore eating it. He learned to do this quite quickly. Soon the other monkeysin his family also began to wash their food before eating it. Later thisbehavior spread to other monkeys in the clan. About the time one hundredmonkeys were washing their food prior to eating it, suddenly all the monkeys onall the islands, some thousands of miles away, began to wash their food beforeeating it.
This surprising observation became known as the HundredthMonkey Effect and has been repeatedly observed. This same phenomenon is true inhumans as well. It is part of the reason we have trends in fashion, theeconomy, and politics, etc. When we understand this concept, it becomes veryimportant for us to develop our positive thinking. Humanity will be free, freeat last. Free to build a better world, by "giving" - from the immensepower of love, instead of "taking" - from the energy of fear.
read more:
en.wikipedia.org/wiki/Hundredth-monkey_effect
https://www.youtube.com/watch?v=Moy6tz6Ubps
அப்ப நாங்க நூத்தி ஒண்ணா. சர்த்தேன்
ReplyDelete