அவளை கொன்றது அது
அவளை கொன்றது அது இயந்திர உலகில் பணத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் உங்களில் நானும் ஒருவன். அயல்நாட்டு வாழ்க்கை என்றால் விடியல் சற்று முன்பாகவே வந்துவிடும். ஏழு மணிக்கு அலுவலகம் நோக்கி நகர வேண்டும். பொது மக்களோடு தொடர்பு இல்லாத வாழ்க்கை தனி வீடு தனி ஊர்தி என்று தனித்து இயங்கும் என்னைப் போன்று பலர் இருப்பார்கள். எங்கள் வாழ்க்கை இப்படித்தான் தொடங்கும் காலையில் அலுவலகம் உள்ளே நுழையும்போது அங்கே நுழைவாயில் ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண்மணி சிரித்த வண்ணமே எங்களை எப்போதும் வரவேற்பாள். வரும் அனைவருக்கும் காலை வணக்கம் சலிக்காமல் சொல்லுவாள் அவள். எத்தனை முறை அந்த பாதையைக் கடந்தாலும் அவள் வருபவர்களை சிரித்து வரவேற்றும் வழி இணைப்பையும் செய்து கொண்டே இருப்பாள். எங்கள் அலுவலகம் தொடங்கிய காலத்திலிருந்து அவள் அங்கே பணிபுரிந்து வந்தாள். எங்களைக் காண யாராவது வந்தால் அவர்களை அமரச் செய்து எங்களுக்கு செய்தி அனுப்புவாள். எங்களுக்கு எந்த பொருள் வந்தாலும் நாங்கள் எந்த பொருளை பெரிய இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றாலும் அவளிடமே ஒப்படைப்போம். உணவு இடைவேளையில் அவள் உணவருந்திக் கொண்டு இருக்கும்போது கூட யார...