நூறாவது குரங்கு

நான் நூறாவது குரங்காக கூட இருக்கலாம்! அது என்னநூறாவது குரங்கு? ஜப்பானில் ஒருதீவில் குரங்குகளுக்கு அவை உண்ணும் பழங்களை கடல் நீரில் கழுவி உண்ண கற்றுக்கொடுக்கப்பட்டது. சில காலம் கழித்து பார்த்தால் கற்றுக்கொடுக்கப்பட்டகுரங்குகளிடமிருந்து அந்த தீவிலுள்ள மற்ற குரங்குகளும் கற்று கொண்டுவிட்டன. அதுமட்டுமில்லாமல் இதே பழக்கம் ஒன்றுகொன்று தொடர்பில்லாத பக்கத்து தீவிலும் பரவிவிட்டது. இதுவே ‘நூறாவது குரங்கு விளைவு‘ எனப்படும். அதாவது எதாவதுஒரு பழக்க வழக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவில் சமூகத்தில் புதிதாக உருவானால் அதுகற்றுக்கொடுக்கப்படாமலே மற்ற சமூகங்களிடமும் பரவிவிடுகிறது. இங்கே நூறு என்பது ஒருகுத்து மதிப்பான அளவுதான். ஒரு வழக்கம் இந்த அளவுக்கு மேலதிகமானவர்களால்கடைபிடிக்கப்படுமானால் அது தானாகவே இதர மக்களிடமும் பரவக்கூடும். இதன் மூலம்நமக்கு புரியும் கருத்து என்பது, நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்கள்செய்யும் போது, அதில் உள்ள குறை நிறைகளை பற்றி கவலைபடாமல் தொடந்து செய்வதன் மூலம் அது நீண்ட தூரம் பயணம் செய்து பலரை நல்வழிபடுத்தும் என்பதுதான். நண்பர்களே,நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம்,...